ஆரிய குளம் சந்தி பகுதியில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

இன்று காலை ஆரிய குளம் சந்திக்கு அண்மையில் நடந்த விபத்தில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனியார் சேவைப் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளிலும் மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பற்றீமா வீதியை சேர்ந்த 50 வயதுடைய குடும்பஸ்தரான அருளப்பு சிறிசோலோகு என்பவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
யாழ்.கிளிநநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 8 முறைப்பாடுகள் பதிவு!
நீடித்த பிரச்சினைக்கு சட்டத்தின் தாமதமும் ஒரு பிரதான காரணமாகும் - 20 ஆவது திருத்தம் நீதி நிர்வாகத்தி...
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம், கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை!
|
|