ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம், கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை!

Thursday, August 26th, 2021

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம், கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர் – அதிபர் வேதன பிரச்சினை தொடர்பான அமைச்சரவை உப குழுவின் அறிக்கை தொடர்பில் அவதானிப்புக்களை முன்வைப்பதற்கு முன்னதாக, கல்வி அமைச்சு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, இன்று அல்லது நாளை கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வடக்கில் அரசியல் மயமாக்கப்படும்  கல்விக் கட்டமைப்பு - ஆபத்து என குற்றம்சாட்டுகின்றது இலங்கை ஆசிரியர...
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு மேலதிக கடமை வழங்கப்பட்டமை மாகாண அதிகாரத்தை பறிக்கும் சூழ்ச்சி...
இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பு - இலங்கைக்கான கட்டார் தூதுவர்...