ஆயுள்வேத மருந்தகத்தை கெற்பேலிக்கு மாற்றுமாறு கோரிக்கை!
Tuesday, January 22nd, 2019
கச்சாய் உப அலுவலகத்துடன் இணைந்துள்ள ஆயுள்வேத மருந்தகத்தை கெற்பேலி தெற்கில் அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடிகாமம் நகரை அண்டி இரு ஆயுள்வேத மருந்தகங்கள் இருக்கும் நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கொடிகாமம் நகரப் பகுதியை அண்டிய பகுதியில் பிரதேச சபையின் அருகிலும் கச்சாய் உப அலுவலகத்துக்கு அருகிலும் ஆயுள்வேத மருந்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பிரதேச சபைக்கும் மற்றது சித்த ஆயுள்வேத திணைக்களத்துக்கும் சொந்தமானது. சந்தியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஏ-9 முதன்மை வீதியிலும் கச்சாய் வீதியில் 200 மீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றன.
பிரதேச சபைக்குச் சொந்தமான ஆயுள்வேத மருந்தகத்தை கெற்பேலி தெற்குப் பகுதியில் அமைப்பதால் அயலிலுள்ள போக்கட்டி, பாலாவி, உசன் கச்சாய் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர். எனவே கச்சாய் உபஅலுவலகத்துடன் இணைந்துள்ள ஆயுள்வேத மருந்தகத்தை கெற்பேலி தெற்கில் அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
|
|
|


