ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக விசேட நடவடிக்கை!
Friday, April 26th, 2024
18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறை விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சிறார்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்ட 10 சம்பங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 10 வயதிற்கும் குறைவான பாடசாலை செல்லும் மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளங்களில் தரவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!
மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் - நிதி அம...
மனித உரிமை மீறப்பட்டிருந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க தயார் - வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு!
|
|
|


