ஆனந்த சுதாகரனின் விடுதலையை விரைவு படுத்த  ஜனாதிபதியிடம் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் கோரிக்கை!

Friday, March 30th, 2018

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதுடன் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளதும் விடுதலை குறித்தும் விரைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது

கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் யாழ் மாநகர சபை உறுப்பினரமான கா வேலும்மயிலும் குகேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணியும் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினரமான றெமீடியஸ் ஆகியோர் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

இன்றுகாலை 11 மணியளவில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை விரைவாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் ஜனாதிபதியை சந்தித்த  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தியதுடன் தாயை இழந்து பரிதவிக்கும் அவரது இரண்டு பிள்ளைகளதும் எதிர்காலம் தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளதுள்ளார்.

அத்துடன் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில் அதற்குரிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவு காலக்கிரமத்தில் அவரது விடுதலை தொடர்பில் நடவடிக்கைகள் மெற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: