ஆசிரிய தொழிற்சங்கங்கள் ஆர்பாட்டத்திற்கு முஸ்தீபு !

Tuesday, May 16th, 2017

கல்வி இராஜாங்க அமைச்சால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தியப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இலங்கையில் நியமனம் வழங்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல கட்சிகள் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மலையகப் பாடசாலைகளில் நிலவிவரும் கணித விஞ்ஞான பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்தியாவிலிருந்து 100 பட்டதாரி ஆசிரியர்களை வரவழைக்கவுள்ளேன். என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்தவை பின்வருமாறு.

இலங்கையில் 15 ஆயிரம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஆனால் இந்தியாவிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களை வரவழைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் நாடு எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தோட்டப்புறப் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறப்படும் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

ஆனால் தொட்டப்புறப் பாடசாலைகளில் கடமையாற்றுவதங்காக இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை வரவழைப்பது இதற்குத் தீர்வாகாது. – என்றார்.

Related posts: