ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை!  

Monday, April 23rd, 2018

வலய மட்டத்தில் ஆசிரியர் குழுவொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் பணியிலுள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் வருடாந்தம் குழந்தை பிரசவம் உள்ளிட்ட வேறு காரணங்களுக்காக விடுமுறைகளை பெற்றுக்கொள்ளும் போது, அக்காலப்பகுதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் காலத்தில் பாடசாலை சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர் சீட்டின் பெறுமதியை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: