ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் தாமதமே பரீட்சை பெறுபேறு வெளியிட முடியாமைக்கு காரணம்  –  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்!

Thursday, January 19th, 2017

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரீட்சை நடைப்பெற்ற நிலையில், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயின்ற ஆசிரியர்களின் பெறுபேறுகள் இன்றையளவிலும் வெளியிடப்படவில்லை. இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் பரீட்சை ஆணையாளருடன் தொடர்புகொண்டு பெறுபேற்றினை வெளியிடுவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதன்போது பதிலளித்த பரீட்சை ஆணையாளர்,

பரீட்சைத் திணைக்களத்தினால் 60 புள்ளிக்குரிய செயற்பாடே மேற்கொள்ளப்பட்டது.மிகுதி 40 புள்ளிகளுக்குரிய செயற்பாடுகள் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளாலேயே அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதங்களுடன் சில ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலிருந்து அனுப்பப்பட்ட பெறுபேற்று தரவுகளிலும் தவறுகள் காணப்பட்டமையினால் மீண்டும் திருப்பி அனுப்பி பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டன.

தற்போது அவை சீர்செய்யப்பட்டு வருகின்றன இவ்வாறான தாமதங்களே மேற்படி பரீட்சைப் பெறுபேற்றை வெளியிடுவதில் தாமதத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவை சீர் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் விரைவில் இப்பெறுபேற்றினை வெளியிடப்படும். இது தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளருக்கும் முறையிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கின்ற ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் காணப்படும் இப்படியான தவறுகள் குறைபாடுகள் சாதாரண குறைபாடாகவோ, சாதாரண தவறாகவோ நோக்க முடியாது. இவ்வாறான விடயங்களில் இலங்கையின் கல்வி அமைச்சும் ஆட்சியிலுள்ள ஜனாதிபதியும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

blogger-image--368589735

Related posts: