ஆசிரியர் தினத்தன்று பாரிய ஆர்பாட்டம் – ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கம்!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக் கொள்வதற்காகவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், எதிர்வரும் ஆசிரியர் தினத்தன்று, பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வு இன்மை, 2016/2017 சுற்று நிருபத்துக்கு அமைய அதிபர்களுக்கான கொடுப்பனவை வழங்காமை, ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையை வழங்காமை போன்ற பல காரணங்களை முன்வைத்தே, குறித்த இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக, எதிர்வரும் 6ம் திகதி பகல் 2 மணிக்கு, கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்குமாறும் , அவ்வமைப்பு மேலும் அழைப்பு விடுத்துள்ளது
Related posts:
தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்புக்குப் பின்னரான ஊரடங்கு நடைமுறை தொடர்பாக வெளியான தகவல்!
இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 467 ஆக அதிகரிப்பு – இழுத்து மூடப்படுகின்றது பாதுகாப...
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
|
|