நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, September 7th, 2020

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளைமுதல் சற்று குறைவடையும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, சூரியனின் தென்திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கமைய நாளை 07ஆம் திகதி ஜிந்தோட்டை, கல்வெலவத்தை, கல்லெல்ல, அத்துரலிய ஆகிய கஹந்தமோதர பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.08 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: