ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!

Thursday, October 3rd, 2019

சம்பள அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி ஆசிரியர்கள் மேலும் 5 நாட்களுக்கு மேற்கொள்ளத்திட்டமிட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7ம் திகதி முதல் 11ம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் இந்த பகிஷ்கரிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள தீர்வு குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வர எதிர்பார்ப்பதாக அசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் மஹிந்த ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஐந்து நாள் ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

இழப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை உறுதிப்படுத்த தவறாது கலந்து கெள்ளுங்கள் – அமைச்சரின் இணைப...
தாமதித்து சிகிச்சைக்கு வருவதினால், சில சமயங்களில் தொற்றாளர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் - யா...
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 6268 பேர் பாதிப்பு -524 பேர் இடைத்தங்கல் ...