தாமதித்து சிகிச்சைக்கு வருவதினால், சில சமயங்களில் தொற்றாளர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் – யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, September 6th, 2021

கொரோனா நோயாளிகள் உரியநேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது பெரும் குறைபாடாக இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கவலலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிக காய்ச்சலுடன் ஏனைய வருத்தங்கள் இருக்கின்ற பொழுது கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

சிலர் வீடுகளில் இருந்து தங்களைத் தாங்களே சிகிச்சை அளித்துக் கொண்டு இருப்பினும் அனைவருமே வைத்தியரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது.

குறிப்பாக தொற்று ஏற்பட்டு மூன்று, நான்கு நாட்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டாலும் சில நாட்களின் பின்னர் நோய் நிலை அதிகரித்து உடல் செயலிழப்பு ஏற்படும்.

இவ்வாறு சில நாட்கள் தாமதித்து வருவதினால், சில சமயங்களில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: