இழப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை உறுதிப்படுத்த தவறாது கலந்து கெள்ளுங்கள் – அமைச்சரின் இணைப்பாளர் ஜெகன் அழைப்பு

Friday, November 23rd, 2018

யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களுக்கு நஸ்ட ஈடு பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ள குறித்த விடயம் தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு தமது பூரணப்படுத்தப்படாத ஆவணங்களை பூர்த்தி செய்து தமக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வடமாகாண இணைப்பாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் உரிய தரப்பினரிடம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்திற்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வருகைதரவுள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்தகால யுத்தம் காரணமாக பாதிப்புற்றவர்கள் அதற்கான நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்வதற்காக புனர்வாழ்வு அதிகார சபைக்கு விண்ணப்பித்தவர்கள் தமது விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும்,  முழுமையாக பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் தொடர்பாக உரிய தரப்பினர் தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்ளும்படியும் அமைச்சரின் இணைப்பாளர் கேட்டுள்ளார்.

குறித்த நிகழ்வின் போது பாதிக்கப்பட்ட 438 பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்கள் 106 பேருக்குமாக மொத்தம் 544 பேருக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: