ஆசியின் போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

கொழும்பு துறைமுகத்திற்கு அவுஸ்திரேலியா கடற்படைக்கு சொந்தமான எச்.எம்.ஏ.எஸ்.பேர்த் என்ற ஏவுகனை கப்பல் நேற்று வருகைதந்துள்ளது.
இதன் போது குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பளித்துள்ளனர். அத்துடன், குறித்த கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் குறித்த கப்பலின் மாலுமிகள் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமர் தலைமையிலான 13 நிறுவனங்கள் நீக்கம்!
மின்னுற்பத்தி நிலையத்தில் பாரிய தீ பரவல்!
இந்தியாவிடமிருந்து மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய திட்டம் ...
|
|