தேர்தலை பழைய முறையில் நடத்தவும் சிக்கல் – தேர்தல் ஆணையாளர் !
Tuesday, August 7th, 2018
மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவதென இதுவரையில் தீர்மானம் இல்லை. பழைய முறையில் நடத்துவதாக இருந்தாலும் புதிதாகச் சட்ட வரைபு ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த முடியாது. புதிய சட்டவரைபு ஒன்றினால் பழைய முறைமையை மீண்டும் சட்டமாக்கினால் மட்டுமே அது முடியும். புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடைமுறையில் இருந்து வந்த பழைய தேர்தல் முறைமை தொடர்பான 1988 ஆம் இலக்க 2 ஆம் பிரிவு நீக்கப்படுகின்றது.
இதனால் மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதிலும் சிக்கல் காணப்படுகின்றது. புதிய முறையில் நடத்துவதானால் எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
Related posts:
நீர்வேலி இரட்டைக் கொலை: நாளை தீர்ப்பு !
விசாரணை ஆணைக்குழுவுக்கு வெளி நபர்ககளை நியமிக்க யோசனை?
இலங்கையின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு ஆதரவு - அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவிப்பு!
|
|
|


