ஆசியாவில் வேகமாக பரவும்  சிகா வைரஸ்!

Wednesday, October 12th, 2016

ஆசியாவில் சிகா தொற்று வேகமாக பரவும் அச்சுறுத்தல் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூரில் சிகா வைரஸ் பரவிய நூற்றுக்கணக்கானோர் பதிவாகி இருப்பதோடு தாய்லாந்தில் இந்த நோய் தொற்றுடன் தொடர்புபட்டு சிறிய தலையுடன் இரு குழந்தைகள் பிறந்தது உறுதியாகியுள்ளது.

இந்த வைரஸ் 70 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு அதில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் குறைந்தது 19 நாடுகளில் பதிவாகியுள்ளன. இந்த வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் மார்கிரேட் சான் குறிப்பிட்டுள்ளார். “துரதிருஷ்டவசமாக விஞ்ஞானிகளிடம் பல சிக்கலான கேள்விகளுக்கு பதிலில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

சிகா தொற்று மத்திய நிலையிலான பாதிப்பை ஏற்படுத்துகின்றபோதும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சிறிய தலையுடன் கூடிய குழந்தைகள் பிறக்கும் பல சம்பவங்களிலும் சிகா வைரஸ் தொடர்புபடுத்தப்பட்டு கூறப்படுகிறது. இந்த வைரஸ் ஆசியாவில் பல தசாப்தங்களாக இருந்தபோதும், பிரேஸிலில் அதன் தற்போதைய வெளிப்பாடு ஆபத்தானதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

who

Related posts: