ஆகக்குறைந்த தாய் மரண வீதம் பதிவான நாடு இலங்கை!

ஆசியாவில் ஆகக்குறைந்த தாய்மரண வீதம் பதிவான நாடாக இலங்கை மாறியுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டில் 112 தாய் மரணங்கள் நிகழ்ந்தன. ஒரு இலட்சம் உயிர்ப்பேறுகளுடன் ஒப்பிடுகையில் இது 33 ஆக காணப்படுகிறது.
2012ம் ஆண்டின் தாய்மரண மீள்பரிசீலனை அறிக்கையில் புள்ளிவிபரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கை சமீபத்தில் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 7 வருடங்களாக இலங்கையில் தாய்மரண வீதம் தொடர்ந்து ஒரே மட்டத்தில் நீடிக்கிறது. தாய்மரணங்களை குறைக்க வேண்டிய வழிவகைகள் மற்றும் கொள்கைத் தீர்மானங்கள் பற்றி அறிக்கையின் ஊடாக கவனம் செலுத்தப்படுகிறது.
Related posts:
இலங்கையில் போர் விமானங்கள் கொள்வனவு செய்ய தடை - ஜனாதிபதி!
அரசியலில் எனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் - அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்...
|
|