அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டத்தின் கீழ் 24 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!
Sunday, June 2nd, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் முதல் 24 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை அஸ்வெசும நிவாரணம் கோரி விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எப்பாவளையில் அமைந்துள்ள லங்கா அரச பொஸ்பேட் நிறுவனத்தின் கண்காணிப்புச் சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டத்தில் 20 இலட்சம் குடும்பங்கள் காப்புறுதிப் பலன்களைப் பெறுவதற்கு உரிமையுள்ளவர்கள் என்பது விசேட அம்சம் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, முதல் சுற்றில் 20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


