அவுஸ்திரேலியா செல்ல முயன்ற வடக்கு கிழக்கைச் சேர்ந்த 10 பேர் கைது!
Friday, May 14th, 2021
சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயன்ற வடக்கு கிழக்கிலுள்ள 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிலாபம் − இரணமடு பகுதியில் வைத்தே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லத் தயாராகி வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரிவிலக்கு வாகனம் கோரும் பாடசாலை அதிபர்கள்!
அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும்!
இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்ற தெரிவுக் குழு!
|
|
|


