அவசர நேரங்களில் மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் ஆராய குழு!
Sunday, July 3rd, 2016
அவசர நிலைமைகளின் போது மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழுவினால் அவசர நிலைமைகளின் போது தடையின்றி மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான பரிந்துரைகள் முன்வைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன கூறினார்.
அத்துடன் அந்த அறிக்கையினை இந்த மாத நிறைவிற்குள் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் ஏற்பட்ட வௌ்ளம் மண்சரிவு மற்றும் சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தின் போது இலங்கை மின்சார சபையினால் குறித்த பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பொருளாதாரம் நவீனமயப்படுத்தப்படும் - பிரதமர்!
சரியானதைச் செய்வது சவாலாகும் - ஒன்றிணைந்து முகங்கொடுத்து முன்னோக்கிச் செல்வோம் - கமநல சேவை உத்தியோகத...
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்க நடவடிக்கை - பெட்ரோலிய...
|
|
|


