இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 871 ஆக உயர்வு!

Tuesday, August 11th, 2020

இலங்கையில் நேற்றையதினம் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 23 கைதிகளும்  ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வந்த நால்வரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டதாகவும்  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 14 பேர் குணமடைந்து நேற்று வைத்தியசாலையைவிட்டு வெளியேறியிருந்தனர். இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 593 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம் தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 267 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 70 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: