அலுகோசு பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
Thursday, February 28th, 2019
அலுகோசு பதவிக்கு 45 விண்ணப்பங்கள் கிடைப்பெற்றுள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விண்ணப்பப்படிவங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று(28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பின்னர் நேர்முகப் பரீட்சை நடாத்தி அலுகோசு பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படும் என சிறைச்சாலைகள் அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அலுகோசு பதவிக்காக வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர்ப்பட்டியல் சிறைச்சாலைகள் அமைச்சினால், சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதிப்புற்ற ஊடகவியலாளர்கள் பற்றிஆராய விஷேட குழு!
இணையில்லா ஆசான்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
வெதுப்பக பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது - உற்பத்தியாளர் சங்கத்தின் தீர்மானம்!
|
|
|


