பாதிப்புற்ற  ஊடகவியலாளர்கள் பற்றிஆராய விஷேட குழு!

Saturday, March 12th, 2016

வெவ்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் கீழ் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பாரபட்சம், அடக்குமுறை மற்றும் சொத்து சேதம் ஆகியவற்றிட்கு முகம் கொடுத்த ஊடகவியலாளர்களுக்கு இந்த விசேட குழுவின் அறிக்கைக்கமைய நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்கள் தமது தொழிற்துறை அடையாளங்களுடன் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட விவரங்களை ஜனாதிபதி காரியாலயத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பான தமது தகவல்களை ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாக எஸ்.டீ. கொடிகார, ஜனாதிபதி மேலதிக செயலாளர், ஜனாதிபதி அலுவலகம்,கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:

ஈழத் தமிழர் தொடர்பில் தமிழக முதல்வர் அவதானம் செலுத்தியமை வரவேற்கத்தக்கது. - அமைச்சர் நாமல் ராஜபக்ச ...
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜன...
எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக மீண்டும் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள் - இலங்கை பெற்றோலிய ...