அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு நீர்கொண்டுவரும் புலிக்குளம் திட்டம் ஆரம்பம்!

Friday, July 23rd, 2021

கிளிநொச்சி அறிவியல்நகர் யாழ் பல்க்லைக்கழக வளாகத்துக்கு பின்புறமாக இருக்கும் புலிக்குளத்திலிருந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வாய்க்கால் மூலம் நீரைக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் இன்று 23-072021 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் ராஜகோபு மற்றும் அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு சம்பிராதயபூர்வமாக வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தனர்.

புலிக்குளத்திலிருந்து அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு வாய்க்கால் மூலம் நீரைக் கொண்டுவருவதற்கான முதல் கட்டமாக, சிறு குளம் ஒன்றைப் கட்டமைப்புக்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலமாக, நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் பல்கலைக்கழகம் சார்பாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக, இந்தத் திட்டத்துக்கான நிதியாக 15 மில்லியன் ரூபாவை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சு ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் முன்னேற்ற நிலை குறித்து கடந்த 23ம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடாத்திய விசேட கலந்துரையாடலில் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் ஆகியோரிடம் கேட்டறிந்திருந்தார்.

இதன்போது நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக இந்தத் திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசாவின் கையெழுத்துடன், விவசாய பீடாதிபதி கலாநிதி வசந்தரூபாவினால், பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளருமான றுஷாங்கனிடம் கையளிக்கப்பட்டிருந்தது. 

இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 7 மில்லியன் ரூபாவில் சிறு குள கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாச திணைக்களப் பணிப்பாளரின் நெறிப்படுத்தலில் பணிகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

000

Related posts: