அறிவிப்புப் பலகை இல்லை என்பதைக் காரணம் காட்டி தப்பிக்க முடியாது – தொல்பொருள் திணைக்கள ஆணையர் எச்சரிக்கை!

Sunday, February 10th, 2019

தொல்பொருள் அமைவிடங்களில் அறிவிப்புப் பலகைகள் இல்லை என்பதைக் காரணம் காட்டி அவ்விடங்களுக்கு தீங்கு விளைவிக்க முடியாது என தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டிலுள்ள அனைத்து தொல்பொருள் அமைவிடங்களிலும் அது தொடர்பான அறிவித்தல் பலகைகளை நிறுவ தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொல்பொருள் அமைவிடங்கள் பெரும்பாலானவற்றில் அறிவிப்புப் பலகை காட்சிப்படுத்தப்படாமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் மரபுரிமைச் சொத்துகளான தொல்பொருட்களைப் பாதுகாப்பது எமது கடமையாகும்.

தொல்பொருட்கள் மீது ஏறி நின்று புகைப்படம் எடுப்பதும் அகௌரவப்படுத்துவதும் தொல்பொருள் சட்டத்தின்படி குற்றச் செயல்களாகும்.

இந்த குற்றச் செயல்களைப் புரியும் எவரும் தான் அறியாமல் செய்துவிட்டதாகக் கூறித் தப்பிக்க முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடெங்கும் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருள் அமைவிடங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 25 ஆயிரம் அமைவிடங்களே தொல்பொருள் திணைக்களத்தினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கை மின்சார சபையை மீள் கட்டமைப்பு செய்ய அமைச்சரவை அனுமதி - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
தேர்தலை பிற்போடும் எண்ணம் எதுவு எம்மிடம் கிடையாது - உரிய திகதியில் நடத்துவதே எமது எதிர்பார்ப்பு என ஜ...
நாட்டை வீழ்த்துவதே போராட்டக்காரர்களின் பிரதான நோக்கம் - வீடுகளை எரித்தவர்கள் நாடாளுமன்றுக்கு வருகைத...