அரேபிய சுற்றுலா சந்தைப்படுத்தும் 30ஆவது நிகழ்வு டுபாயில்!
Monday, May 1st, 2023
அரேபிய சுற்றுலா சந்தைப்படுத்தும், 30ஆவது நிகழ்வு டுபாயில் ஆரம்பமாகவுள்ளது. டுபாய் உலக வரத்தக மையத்தில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த 50 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் துசான் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் 11 மணிக்கு உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா நிகழ்வில், பல நாடுகளை சேர்ந்த புதிய நிறுவனங்களும், பங்குகொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச நிகழ்வில், 150 நாடுகளைச் சேரந்த 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்குகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளில் அதிகளவில் செலவிடும் பயணிகளாக அரேபிய பயணிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாசகம் கேட்க முடியாது முற்றாகத் தடை!
சுகாதார துறையினரின் ஆலோசனை அடிப்படையில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - முன்னாள் ஜனாதிப...
அனைத்தையும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது எளிதானது - அதனால் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை உருவாக...
|
|
|


