அரிசி இறக்குமதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் – விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறும் ஜனாதிபதி பணிப்பு!
Saturday, December 10th, 2022
இலங்கைக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டே ஜனாதிபதி, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது நாளில், எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டிருந்தார்.
பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை துறைமுகத்தில் நைஜீரிய கடற்படை கப்பல்!
இன்று தேசிய தமிழ்த்தின விழா: பிரதம விருந்தினராக ஜனாதிபதி !
ஜனாதிபதி ரணில் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா!
|
|
|


