அரிசியின் விலை அதிகரிப்பு!

Wednesday, November 23rd, 2016

கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அரியின் விலை அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் விற்பனை , உணவு கொள்கை மற்றும் விவசாய வர்த்தக பிரிவின் பணிப்பாளர் துமிந்த பிரிய தர்ஷன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசிடமிருந்து 150,000 மெட்றிக் தொன் நெல்லை சந்தைக்கு விடுவிப்பதற்கு நெல் கொள்வனவு சபை தீர்மானித்துள்ளது.

இன்று நடைபெறவுள்ள பொருளாதார முகாமைத்துவ குழுவின் கலந்துரையாடலின் போது இந்த தீர்மானத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக நெற் கொள்வனவு சபையின் எம்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.இந்த நெல் சந்தைக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் அரிசியின் விலை மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

basmati-rice-680x380

Related posts: