அரிசிக் கொள்வனவில் மக்கள் கவனம் தேவை நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரிக்கை
Saturday, January 7th, 2017
மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 14ஆயிரம் கிலோ கிராம் அரிசி, அதிகாரசபையால் கைப்பற்றப்பட்டுள்ளதால் அரிசியைக் கொள்வனவு செய்யும் போது அதன் தரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரியுள்ளது..
கொழும்பு -11 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை பின்வருமாறு
எமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்து மேலும் இதன்போது கைப்பற்றப்பட்ட அரிசிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இது தொடர்பில் வழங்கப்படும் அறிக்கையின் படியே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.

Related posts:
பிறவுண் வீதியில் கிரனேட் குண்டுகள் மீட்பு!
நியமனம் வழங்கப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு சேவை முன் பயிற்சி!
மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம்!
|
|
|


