அரச வைத்தியர் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் பிற்போடப்பட்டது!
Friday, September 16th, 2016
அடுத்த வாரமளவில் மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் கூறியுள்ளது. நேற்று (15) மாலை சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.
தமது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் நேற்று சில மாவட்டங்களின் வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கல்வியமைச்சுக்கு அத்துமீறி நுழைந்து எதிர்ப்புத் தெரிவித்த சில வைத்தியர்கள் நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று வெளியேறி இருந்தனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், வைத்தியர்களின் இது போன்ற செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி இருந்தார்.
நோயாளர்களுக்கும் பொது மக்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாக அரச வைத்தியர்கள் சங்கம் செயற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.

Related posts:
|
|
|


