அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் அமைச்சர்கள் – எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை!

Sunday, February 13th, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என்பதைக் கண்டறிய புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ அல்லது அவற்றைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்டவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இது போன்ற 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் அரசு வாகனங்கள் அல்லது பிற சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க புலனாய்வுப் பிரிவினரிடம் ஏற்கனவே கேட்கப்பட்டுள்ளது.

அவ்வாறான ஒருவர் உத்தியோகபூர்வமற்ற முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டால் முதலில் அமைச்சருக்கு தெரியப்படுத்தவும் பின்னர் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: