அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, December 3rd, 2021
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக எதிர்வரும் 23 ஆம் திகதிமுதல் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு விடுமுறை வழங்க கல்வியமைச்சினால் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது குறித்த தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 24 ஆம் திகதிமுதல் 2022 ஜனவரி 2 ஆம் திகதி வரை குறித்த விடுமுறையை நீடிக்கக் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2022 ஜனவரி 3 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இயல்பு நிலையை கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் வர்த்தமானி - பிரத பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன!
20 ஆவது சீர்திருத்தத்தில் தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு தேர்தல் முறை உருவாக்கப்படும்...
35 நாடுகளுக்கு ஏற்றுமதி - 21 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டிய இலங்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
|
|
|


