அரச பதவிகளில் 8000 பட்டதாரிகள்!
 Thursday, June 30th, 2016
        
                    Thursday, June 30th, 2016
            
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரிகளாக 8000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைய இது நடைமுறைபடுத்தப்படவுள்ளதாகவும், இதற்கமைய குறித்த பட்டதாரிகளில் 8000 பேரை அரச நிறுவனங்களுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அரச சேவைக்கு முதற் தடவையாக இவ்வாறான பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும், அடுத்த மாதம் அளவில் பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உடைந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது!
இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க 12 வாக்குச் சாவடிகள்  - வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவிப்பு!
சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது - அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது - ஈ.பி.டி.பியின் ஊடக பேச்ச...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        