அரச பணியாளர்களுக்கு தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் – அமைச்சரவையும் அங்கீகாரம்!
Tuesday, February 28th, 2023
அரச சேவை ஊழியர்களுக்கான தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரச சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் அரச சேவையில் இணைந்தவர்களுக்காக இந்த பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் ஸ்தாபிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, பணியில் சேர்ந்த பிறகு, பணியாளரின் அடிப்படை சம்பளத்தில் 8 சதவீதமும், தொழில்தருநரின் பங்களிப்பில் 12 சதவீதமும் மாதந்தோறும் இந்த நிதியத்தில் வரவு வைக்கப்படும்.
உத்தேச பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை முகாமைத்துவப்படுத்துவதற்காக விசேட தகைமைகளைக் கொண்ட நிதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படுவாரென அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமெரிக்க டொலரின் பெறுமதி 160 ரூபாவாக அதிகரிக்கும்!
யாழில் எலிக்காய்ச்சலால் மாணவன் இறப்பு!
இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை – ஊர்காவற...
|
|
|


