அமெரிக்க டொலரின் பெறுமதி 160 ரூபாவாக அதிகரிக்கும்!

Monday, November 28th, 2016

நாட்டின் சீரற்ற நிதி முகாமைத்துவம் காரணமாக இன்னும் மூன்று நான்கு மாதங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 160 ரூபாவாக அதிகரிக்கக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பந்துல, ஒரு வார காலத்திற்குள் டொலரின் பெறுமதியை 130 வாக குறைப்பதாக நிதியமைச்சர் ஒரு முறை கூறியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தற்போது டொலர் ஒன்றின் பெறுமதி 151 ரூபா, இன்னும் மூன்று மாதங்களில் அது 160 ரூபாவாக அதிகரிக்கும்.

டொலரின் விலையை குறைப்பதற்கா கையிருப்பதில் இருந்து 8.2 பில்லியன் ரூபாவில் .3.2 பில்லியன் ரூபா சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

1

Related posts:

ஜனநாயக போராளிகள் அமைப்பின் உறுப்பினர் இனியவனின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களை மாகாண பொதுச்சேவையில் இணைக்க நடவடிக்கை விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ...
பாணின் விலையை 3 ரூபாவால் அதிகரிக்க யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மகேசன் அனுமதி – இன்றுமுதல் நடைமுறை!