அரச பணியாளர்களுக்கு இன்று விசேட விடுமுறை – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் வழமைபோன்று சேவை முன்னெடுப்பு!

Monday, June 13th, 2022

அரச பணியாளர்களுக்கு இன்றையதினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சினால் இதற்கான சுற்றுநிருபம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதற்கமைய, இன்றையதினம் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது சேவைகளை இன்று வழமைபோன்று சேவையை முன்னெடுத்திருந்தது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை பூரணை விடுமுறைதினம் என்பதால் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மூடப்படவுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகத்தின் சேவைகள் வழமை போல முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரச அலுவலகங்களுக்கு விடுமுறைதினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதான காரியலயமும் ஏனைய பிராந்திய அலுவலகங்களும் வழமை போன்று இன்று திறக்கப்பட்டதாகவும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் சரத் ரூபசிங்க தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: