அரச நில அளவையாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில்!

Wednesday, March 14th, 2018

இன்றுமுதல் அரச நில அளவையாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டின் நில அளவை பணிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க தீர்மானித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று 14 ஆம் நாளை எட்டியும் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்க பெறவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்க  ஒன்றிணைந்த  குழுவின்  தலைவர்  எட்வட்  மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த போராட்டத்திற்கு  ஆதரவு வழங்குவதாக  யாழ்ப்பாண பல்கலைக்கழக  ஊழியர் சங்க தலைவர் கலாராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts:


ஆடை ஏற்றுமதி துறை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒளடத ஏற்றுமதி துறையிலும் கவனம் செலுத்தப்படும் -...
தளர்த்தப்பட்டது இரசாயன உர இறக்குமதிக்கான தடை – ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது அதிவிசேட வர்த்த...
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி - தேர்தல்கள் ஆணைக்...