2020ஆம் ஆண்டு கட்டாய நடைமுறை: வட மாகாண ஆளுநர் பணிப்புரை!

Tuesday, September 24th, 2019


வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளப்படக்கூடாது என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் –

2020ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்போது, பாடசாலைகளில் மாணவர்களை இணைத்து கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை விட அதிகமாக காணப்பட்டதுடன், அனுமதியின்றி மேலதிக பிரிவுகளும் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியினை மேற்கொள்ளும் போது மாகாண கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட வகுப்பு பிரிவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட வேண்டும்.ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது.

இவ்விடயம் தொடர்பாக தனிப்பட்ட கவனத்தினை செலுத்தி மாகாண பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக சகல பாடசாலை அதிபர்களுக்கும் தெரிவித்து இவ்விடயத்தினை 2020ம் ஆண்டில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறும் இது தொடர்பான அறிக்கையினை சகல கல்விப் பணிப்பாளர்களிடமிருந்தும் பெற்று சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: