அரச நிறுவனங்களுக்கு 500 தகவல் உத்தியோகத்தர்களை நியமிக்க முயற்சி!

தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளின் கீழ், நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு 500 தகவல் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் உத்தியோகத்தர்களை நியமித்தல் தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களையும் தெளிவுபடுத்தி சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் அமைச்சுகள், திணைக்களங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாகாண சபைகளின் அமைச்சுகள் மற்றும் மாகாண திணைக்களங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தகவல் உத்தியோகத்தர்களை நியமிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மாத இறுதிக்குள் தகவல் உத்தியோகத்தர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை நிறைவுசெய்யுமாறு சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது தகவல் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Related posts:
|
|