அரச நிர்வாகத்தை சீரமைக்க அனைவரும் உறுதியளித்துள்ளனர் – அரச ஊழியர்கள் வசதியான உடையில் வரலாம் என்ற சுற்றறிக்கையும் இரத்து செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!

Sunday, November 27th, 2022

அரங்க ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து கடமைக்கு சமுகமளிக்குமாறு விடுக்கப்பட்ட சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் இரத்து செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன நெற்று நாமாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஆசிரியர்களின் ஆடை பிரச்சனைக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் தங்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் முத்தரப்பு குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. எட்டு மாவட்டங்களில் எட்டு மாநகர சபைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.  அரங்க ஊழியர்கள் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர்களின் அபிலாஷைகளுக்காக பல்வேறு முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மாகாண சபை முறைமையில் திருத்தம் மேற்கொண்டு வாக்களிப்பு முறையை மாற்றும் முயற்சிகளினால் உள்ளுராட்சி மன்றங்கள் குழப்பமான நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் பிரதமர்  தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதியின் அரசாங்கத்தின் கீழ் அரச நிர்வாகத்தை சீரமைக்க அனைவரும் உறுதியளித்துள்ளனர். அரச நிர்வாகத்தை முறையான வகையில் முன்னெடுப்பதே அண்மைக்கால சவாலாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: