அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை!
Tuesday, October 13th, 2020
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவையாற்றும் அனைத்து ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை புதுப்பித்துகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த தகவல்களை எதிர்வரும் 3 தினங்களுக்குள் திரட்டுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் தேவை ஏற்படின் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்களை வழங்குவதற்கு நிறுவன பிரதானிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிங்கபூரிற்கு சென்றார் பிரதமர்!
பாதசாரிகள் கடவையை மாற்றியமைக்க நடவடிக்கை!
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது!
|
|
|


