அரச சேவையாளர்களுக்கு இன்றுமுதல் வேதன அதிகரிப்பு – நிதியமைச்சு தெரிவித்துள்ளது!
Monday, July 1st, 2019
முன்மொழியப்பட்ட அரச சேவையாளர்களின் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட கொடுப்பனவுகளை அதிகரித்தல் இன்றுமுதல் அமுல்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 11 இலட்சம் அரச சேவையாளர்களுக்கான 2 ஆயிரத்து 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு, பாதுகாப்பு கொடுப்பனவை உயர்த்துதல், ஓய்வூதியதாரிகளின் வேதன முரண்பாட்டை நீக்குதல் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை உயர்த்துதல் உள்ளிட்டவை இன்றுமுதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக சுமார் 40 ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் இன்று முதல் பதிவு மேற்கொள்ளலாம்!
கணித மாதிரிகளின் அடிப்படையில் வானிலை தகவல்கள் - வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை!
பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு அடுத்த வாரம்முதல் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் - இராஜாங்க அமைச்சர்...
|
|
|


