கணித மாதிரிகளின் அடிப்படையில் வானிலை தகவல்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை!

Wednesday, October 25th, 2017

கணித மாதிரிகளின் அடிப்படையில் நாட்டின் வானிலை தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி அனுஷா வர்ணசூரிய , நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கிடைக்கப்பெறும் காலநிலை தகவல்களை இயற்பியல் படிவங்களிற்கு அமைவாக மதிப்பீடுகளை மேற்கொண்டு எதிர்வுகூறல் இடம்பெறும் என்றார்.

இதற்கான தரவுகளை திரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் விலை மிக அதிகமாகும். இருப்பினும் உலகின் ஏனைய வளிமண்டலவியல் நிறுவனங்கள் இந்த முறையின் ஊடாக வழங்கும் தரவுகளை கொண்டு இலங்கைக்கு இது பயன்படுத்தப்பட்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்கள் தொடர்பில் காலநிலை எதிர்வு கூறப்பட்டுவருகின்றன. இந்த எதிர்வுகூறல் சரியாக அமைந்திருப்பதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: