தெற்கின் பிரச்சினை பற்றியும் வடக்கு அரசியல்வாதிகள் பேச வேண்டும்: வடக்கின் ஆளுநர்!

Friday, November 4th, 2016

வடக்கின் அரசியல்வாதிகள் தமது பகுதி பிரச்சினைகளை மாத்திரமல்லாது தென்பகுதியிலுள்ள பிரச்சினைகள் பற்றியும் பேச வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள் பலர் மக்களை மோதவிட்டு மிகவும் துரிதமாக அதிகாரத்திற்கு வர முயற்சித்து வருகின்றனர்.இறுதி இந்த பிரச்சினைகள் காரணமாக அப்பாவி மக்கள் மாத்திரமே துன்பங்களை அனுபவிக்கின்றனர் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் ஆவா குழு போன்று தெற்கில் பல்வேறு பாதாள உலக குழுக்கள் உள்ளன. அவற்றின் நோக்கங்கள் ஒன்று என்ற போதிலும் பெயரில் மட்டும் மாற்றம் உள்ளது.ஆவா குழு சம்பந்தமாக பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன. எனக்கு இது பற்றிய தகவல்கள் கிடைத்ததும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை அழைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆலோசனை வழங்கினேன்.

வடக்கில் அல்ல தெற்கில் நடந்த இப்படியான சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதா? எனவும் ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் நடக்கும் பாதாள உலக செயல்களின் பின்னணியில் அரசியல் சக்தி ஒன்று செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டுள்ள தகவல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர், தான் அறிந்தவரையில், இந்த செயல்களில் பின்னணியில் இராணுவத்தினருக்கு தொடர்பில்லை. இது தொடர்பாக ராஜித சேனாரத்னவிற்கு பிரச்சினைகள் இருக்குமாயின் ஊடகங்களிடம் கருத்துக்களை வெளியிடாது, இராணுவத்தினர், பொலிஸார், பிரதமர், ஜனாதிபதி ஆகிய பொறுப்புக் கூற கூடியவர்களின் கவனத்திற்கு கொண்டு விசாரணை நடத்தியிருக்கலாம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

1792947426maxresdefault

Related posts: