அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!
Friday, April 7th, 2023
அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சித்தி மரீனா மொஹமட், நரசிங்க ஹேரத் முதியன்சலாகே சித்ரானந்த, பேராசிரியர் நாகநாதன் செல்வகுமாரன், மானிக்க படதுருகே ரோஹன புஷ்பகுமார, கலாநிதி. அங்கம்பொதி தமித நந்தனி டீ சொய்ஷா, ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் பல்லேகம சந்திரரத்னே பல்லேகம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு சபையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரச சேவைகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
27ஆம் திகதி கொரிய மொழி பரீட்சை ஆரம்பம்!
உயர்தர பரீட்சை தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு - அரசாங்கம் !
இந்தியாவை அடுத்து சீனாவிடமிருந்தும் இலங்கைக்கு வருகின்றது அரிசி - மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உ...
|
|
|


