அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பு !
Thursday, January 6th, 2022
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளது.
இன்று வியாழக்கிழமை குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்படவுள்ளது.
எவ்வாறாயினும், அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் திட்டத்திற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.
ஓய்வுபெறும் வயது 62 ஆக காணப்பட வேண்டும் என பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தினூடாக குறித்த சங்கம் இதனை தெரிவித்திருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மே மாதம் 7ஆம் திகதி தொழிலாளர் தினம்!
ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் !
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!
|
|
|


