ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்கினை அளிப்பதற்கு மாத்திரமே தகுதியுடையவர் – வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

Monday, February 13th, 2023

அடுத்தமாதம் 9 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள சகல வாக்காளர்கள் மற்றும் அஞ்சல் மூல வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்கினை அளிப்பதற்கு மாத்திரமே தகுதியுடையவர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வாக்குச் சீட்டில், போட்டியிடும் கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடும் பட்சத்தில் சுயேச்சைக் குழுக்கள் என்ற வார்த்தை மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் அல்லது தேர்தல் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் எண் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வாக்களிக்கப்பட வேண்டிய பகுதியில் மாத்திரம் புள்ளடியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்களுடன் இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக நிதியமைச்சினால் ஒதுகிடப்பட்டுள்ள நிதி, இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை என பெஃப்ரல் அமைப்பு கொழும்பில நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: