அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க தீர்மானம் – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!

Saturday, December 25th, 2021

அரச ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்காக விசேட முற்பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 4 ஆயிரம் ரூபாய்கு மிகாமல் விசேட முற்பணத்தைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு, அதற்கான சுற்றறிக்கையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த முற்பணம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts: