அரச ஊடகங்களின் முக்கியஸ்தர்கள் – தேர்தல் ஆணையாளர் பேச்சுவார்த்தை!

Saturday, January 6th, 2018

தேர்தல்  சுட்டிக்காட்டல்களை (criteria ) உரிய வகையில் பின்பற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் செயற்படவேண்டும் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன தெரவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகங்களுக்கு பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக சுட்டிக்காட்டல்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று அரசாங்க ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் தேர்தல் செயலகத்தில்  நடைபெற்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதுதொடர்பாக பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன மேலும் தெரிவிக்கையில்

எமது நோக்கம் தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டள்ள ஊடக சுட்டிக்காட்டல்களை தேர்தல் காலங்களில் நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது அரச தகவல் திணைக்களம் ,அரச ஊடக நிறுவனங்கள் இந்த ஊடக சுட்டிக்காட்டல்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சுதந்திர நீதியான தேர்தலுக்கு பங்களிப்பு செய்வதற்கு நாம் அர்ப்பணித்துள்ளோம். அதனை நிறைவேற்றவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அனைத்து ஊடகங்களும் இந்த சுட்டிக்காட்டல்களுக்கு அமைவாக செயற்பட்டு சுதந்திரமான தேர்தலுக்கும் நியாயமான தேர்தல் நடப்பதற்கும் ஒத்துழைப்பதற்கும் உறுதியெடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

Related posts: