டெங்கு பெருக்கமடைவதற்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கும் தொடர்பு இல்லை – ஜனாதிபதி!

Sunday, June 25th, 2017

நாடு முழுவதும் டெங்கு பெருக்கமடைவதற்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கும் இடையே தொடர்பு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற திறந்த விவாத நிகழ்ச்சி ஒன்றின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது நாட்டில் உள்ள அனைவரினதும் பொறுப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்இதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட கூடிய அனைத்தையும் மேற்கொள்ளும்.மழை மற்றும் மீதொட்டமுல்லை குப்பை பிரச்சினை காரணமாக அனைத்து இடங்களிலும் குப்பை கொட்டப்படும் நிலையிலேயே டெங்கு தொற்று அதிகாரிக்க காரணமாக அமைந்தது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதனிடையே, துரிதமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைய கொழும்பில் டெங்கு பெருக்கத்தை கட்டுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுநேற்று ஆரம்பமான இந்த விசேட வேலைத்திட்டத்தில், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சுமார் ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

கொழும்பு மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களின் 557 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 2 ஆயிரத்து 600 இடங்களில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த வேலைத்திட்டத்திற்கு அமைய ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அரச மற்றும் தனியார் அலுவலகங்களின் சுற்றுச்சூழல்கள் துப்பரவு செய்யப்படவேண்டும்அத்துடன், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்களின் வீடுகளைச் சூழவுள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களை அறிவுறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு 14 மற்றும் 15 பிரதேச செயலகப் பிரிவுகள் டெங்கு நோய் அதிகம் பரவும் பகுதியாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Related posts: